வலி
வலி
மரணம் ஈன்றெடுத்த குழந்தை நான்
விதையில்லா விருட்சம் நான்
மலர் காய் கனி உணர்ந்திரா
உயிர் நான்
கொட்டும் பனியும்
வெட்டும் வெய்யிலும்
யாதும் ஒன்றே எனக்கு
என் பிளந்த இதையத்திலிருந்து
உயிரின் ஓசை கேட்டுக்கொண்டிருக்கிறது
உருவம் சிதைந்த எனக்குள்
உயிரின் உருவம் மலர்கிறது
இதை விதி என்பதா
இல்லை விதியின் விலக்கு என்பதா
உயிரின் ஊசலில்
உயிரின் பிரசவம்...
