STORYMIRROR

Saravanan P

Inspirational

4  

Saravanan P

Inspirational

விவசாயம்

விவசாயம்

1 min
381

வானம் பொய்த்த போதும் 

எங்கள் உழவரின் 

உழைப்பு தோற்கவில்லை.


தோளினில் உழவு 

செய்யும் கலப்பை

எவ்வாறு வார்த்தைகளில் 

அடக்குவது உழவரின் சிறப்பை.


பிறர் உண்ண தன்நலம் மறந்து

இவ்வுலகத்துக்கு படைப்பர் 

அறுசுவை விருந்து.


புயல் , பஞ்சம் ,ஆங்கார மழை

தாக்கினாலும் மழலை 

நடை பழகும் பொழுது 

விழுந்து எழுவது போல்

மீண்டும் நடவு செய்யும் 

அற்புதம் கண்டோம்.


பணத்தினில் உழவர் 

பற்று கொள்ளாத

வரையே இந்த உலகம் 

உயிர்ப்பித்து இருக்கும்.


நாமும் செய்வோம் விவசாயம்

ஏனெனில்  சமூகம் 

தொன்றுதொட்டு வாழ ,வளர

ஆணிவேராம் விவசாயத்தை

உறுதி செய்வோம்.



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational