விதை
விதை


உள்ளம் வகுத்த வகையல்லால் – வாழ்க்கை
உயர்வு என்பது ஏதிங்கே?
கள்ளம் கழிந்த மனதல்லால் – உடல் மன
கழிவுகள் நீங்குவது ஏதிங்கே ?
பள்ளம்... வகுத்த பாதை அல்ல... முயன்றால்
சீராகாதோ எதுவும் வாழ்வில்?
வெள்ளத் தனைய மலர்நீட்டம்... மாந்தர்
எண்ணத் தனைய வாழ்வொக்கும்...
அறிஞர் சொன்ன அறவுரை இதுவாகும்... அறிந்து
தெளிந்து நடந்தால் வாழ்க்கை நலமாகும்!
அறிவோம்... ஆராய்வோம்.. எண்ணமதை...
எண்ணத்தால் விதைத்திடுவோம் புதிய விதை!