Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Priya jaganath

Fantasy Inspirational Others

3  

Priya jaganath

Fantasy Inspirational Others

வெளிச்சத்திற்கு வந்த உறவு

வெளிச்சத்திற்கு வந்த உறவு

3 mins
224


நம் அனைவருடைய வாழ்க்கையிலும் உறவுகள் என்பது முக்கிய இடத்தை வகிக்கிறது நம் சில உறவுகள் உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கின்றன உறவுகள் ஏதோ ஒரு வகையில் நம்மோடு ஒரு பந்தத்தில் இருப்பதினால் தான் அவர்கள் உறவுகள் என்று சொல்கிறோம் அந்த எல்லா உறவுகளும் நமக்கு உண்மையாகவே இருப்பதில்லை அது போன்ற உண்மை உருவங்களை கண்டு கொள்வதற்கு இந்த கதை உங்களுக்கு உதவி செய்யும் இது பிரேமா என்னும் ஒரு பெண்ணுடைய உண்மை கதை பிரேமா சென்னை நகரத்தில் வசித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண் அவளுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள் பிரேமாவும் அவளுடைய இரண்டு சகோதரிகளும் திருமணம் ஆகி நல்ல வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் பிரேமாவுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் பிரேமா மிகவும் அன்பானவள் எப்பொழுதும் அவளை சுற்றி உள்ளவர்களுடன் நல்ல உறவை கொண்டிருப்பாள் அவளை தேடி வருபவர்களுக்கு நல்ல உபசரித்து நல்லபடியாக பார்த்துக் கொள்வாள் அவள் இரண்டு சகோதரிகள்மீதும் மிகவும் அன்போடு இருப்பாள் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு முன் வருவாள் இப்படி போய்க்கொண்டிருந்தபோது பிரேமாவின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது பிரேமாவின் வசதி வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகி மோசமான நிலைமைக்கு மாறிக்கொண்டிருந்தது அப்பொழுது அவள் உறவினர்கள் அவளிடம் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார்கள் அவள் அதிகமாக அன்பு காட்டிய அவளுடைய இரண்டு சகோதரிகளும் அவளுடன் பேசுவதற்கு தயங்கினார்கள் எங்கே இவள் ஏதாவது உதவி கேட்டு விடுவாளோ என்று ஆனால் அப்பொழுதும் பிரேமா அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை அவள் மற்றவர்களிடம் நல்லதாகவே நடந்து கொண்டாள் இப்படியே கொஞ்ச நாள் போனது கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வருவதைப் போல் பிரேமாவிற்கு ஒரு விபத்து ஏற்பட்டது அந்த விபத்தில் பிரேமாவின் கை உடைந்தது அவள் படுத்த படுக்கை ஆனால் அவள் இதயம் உடைந்து போனது அவள் சோகத்தின் எல்லைக்கு போனால் அவள் மிகவும் வருத்தத்தில் இருந்ததால் அவள் நம்பிக்கையை முழுவதும் இழந்தால் அதுவரைக்கும் பட்டும் படாத பேசிக் கொண்டிருந்த உறவுகள் அவளிடம் பேசுவதை முழுவதும் நிறுத்திக் கொண்டார்கள் அறிந்த அவளுடைய சகோதரிகளும் அவளை தூரத்தில் இருந்து விசாரித்துக் கொண்டு காணாமல் போனவர்கள் தான் பிரேமாவிற்கு அவள் நிலைமையை கண்டு கஷ்டப்படுவதை விட அவள் உறவுகள் இப்படி மாறிவிட்டார்கள் என்று அதிகமாக வருந்தினாள் அவளுடைய மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் தவித்தார்கள் மற்றவர்களுக்காக அவள் எல்லாவற்றையும் தொலைத்து விட்டால் என்று இக்கட்டான காலத்தில் அவள் கஷ்டத்தை பங்கு கொள்ள யாரும் இல்லை என்று முழுவதும் உணர்ந்தால் அழைக்க முடிந்து விட்டது என்று எண்ணினால் அவள் கணவரும் அவள் பிள்ளையும் அவளை ஒரு பொழுதும் விடவில்லை முன்பு இருந்ததை விட பிரேமா மீது அதிகமான அன்பை அவர்கள் பொழிந்தார்கள் பிரேமாவின் மருத்துவ செலவிற்காக அவளுடைய கணவர் எந்த வேலை கிடைக்கிறதோ அதை செய்தான் சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்கு அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள் அவள் நாளடைவில் குணமாக ஆரம்பித்தாள் பிரேமாவும் அவள் குடும்பமும் அவர்களுக்கு இருப்பதை வைத்து மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பிரேமா செய்த நல்ல காரியங்களுக்காக கடவுள் அவளை மறுபடியும் அவளுக்கு வசதி வாய்ப்புகளை கொடுக்க ஆரம்பித்தார் பிரேமாவிற்கு வசதி வாய்ப்புகள் வருவதைக் கண்ட உறவுகள் அவளுடன் மறுபடியும் உறவு கொள்ள முயற்சி செய்தார்கள் என்றும் இல்லாமல் அவளுடைய சகோதரிகளும் பிரேமாவிற்கு அடிக்கடி போன் செய்து பேச ஆரம்பித்தார்கள் அப்பொழுது பிரேமாவிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை அவர்களிடம் அவளுடைய வாழ்க்கையில் உண்மையான உறவுகள் யார் என்று அவள் முழுமையாக உணர்ந்தால் அவளுடைய கஷ்ட காலத்தில் அவளுடன் இருந்து அவளுடைய கஷ்டத்தை பங்கு கொண்ட அவள் கணவரும் அவள் மகளும் போதும் என்று அவள் உணர்ந்தால் பொய்யான அன்பு நிறம் மாறிக்கொண்டே இருக்கும் என்று புரிந்து கொண்டாள் மிகவும் சந்தோஷமாக அவள் உண்மை உறவான கணவர் அவளுடைய மகளுடன் சந்தோஷமாக இருந்தால் இந்தக் கதையில் இருந்து நாம் கற்றுக் கொள்வது நம்முடன் எத்தனை உறவுகள் இருந்தாலும் எந்த உறவு உண்மையான உறவு என்று உணர்த்துவது நம் கஷ்ட காலங்கள் தான் நம் கஷ்டத்தை பங்கு கொள்ளும் உறவு நமக்கு கிடைத்தால் நம்மை விட அதிர்ஷ்டசாலி வேற யாரும் இல்லை அந்த உறவுக்காக நாம் எதையும் செய்யலாம் பொய்யான உறவுகளுக்கு முதலிடம் கொடுத்து நம் அனைத்தையும் இழந்து தவிப்பதை விட உண்மையான உறவுக்காக நாம் கடைசி மூச்சு வரை வாழலாம் கஷ்டங்கள் வரும்போது சோர்ந்து போகாதீர்கள் உண்மை என்னவென்று புரிய வைப்பது கஷ்டங்கள் தான் நம்முடன் கடைசி வரை யார் துணை நிற்பார் என்று தெள்ளத்தெளிவாக காட்டுகிறது


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy