STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

வாழ்வோம்...... வாழ்விப்போம்!

வாழ்வோம்...... வாழ்விப்போம்!

1 min
23.6K

இன்று...... இதுவே .....

இயற்கையின் சிங்காரம்!

மழைக்காலத்தில் ......

கொசுக்களின் ரீங்காரம்

நோய்களின் கூடாரம்!

தெருக்களெங்கும் நாற்றம்....

தெருநாய்களின் சீற்றம்....

அய்யோ! என அலற வைக்கும்!

மலையோ என மலைக்க வைக்கும்!

குப்பைகளை எரியூட்டி...

சுற்றுச்சூழலை மாசாக்கி...

ஓசோனை ஓட்டையாக்கி....

பூமியை இடுகாடாக்கி....

இவற்றை......

வருங்கால சமுதாயத்திற்கு வைப்புநிதியாக்கி.....

அடுத்து சந்திரமண்டலமா? செவ்வாய் கிரகமா? கணக்குப் போடும் மனிதா!

நாளைக் கிடைக்கும் களாக்காயை விட ....

இன்று கிடைக்கும் பலாக்காயே சிறந்தது!

அறிவியலின் ஆக்கம்....

ஆடம்பரங்களின் தாக்கம்.....

கழிவுகளின் பெருக்கம் ........

அழிவுகளை வகுக்கும்!

உணர்ந்தால் பிழைத்துக்கொள்வாய்!

மறுத்தால் அழித்துக்கொள்வாய்!

அளவாய் பயன்படுத்துவோம்!

சுற்றுச்சூழலைக் காப்போம்!

அன்னை பூமியைக் காப்போம்!

ஆனந்தமாய் வாழ்வோம்!

வாழ்வோம்..... வாழ்விப்போம்!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational