வாழ்க்கை சக்கரம்
வாழ்க்கை சக்கரம்
முதலில் ....
சுவாரஸ்ய ஆரம்பம்
வயிற்றில் கருவாய்
தனித்தே உருவாகி
உலகில் வலம்வந்து
இறுதியில்......
கணிக்கப்படாமல்
ஏதோ ஒரு நேரத்தில்
அதிர்ச்சியில் மாண்டு
பிணமாக
கல்லறையிலோ.......
எரி மேடையோ .....
இதற்கு இடையில்
தவழ்ந்து சென்று
நடந்து பழகி
அன்னை அரவணைப்பில்
தந்தை பாதுகாப்பில்
உயர வளர்ந்து
பள்ளியில் பயின்று
பருவ வயதும்
கல்லூரியிலும்
வேலை தேடியும்
பயணத்திலும்
பணியிலும்
நண்பர்களுடனும்
கவலையிலும்
மகிழ்ச்சியிலும்
காதலுடனும் சில நாட்கள் ......!!
!
மேலும்.....
மணம் முடித்து
வாரிசு பெற்று
பேணி காத்து
பாசத்தில் திளைத்து
உடம்பு போட்டு
வயது தளர்ந்து
முடி நரைத்து
சொத்துக்கள் சேர்த்து
மற்றும் பல
கணக்கிலடங்கா
பொறுப்புகள் .......!!!
இருப்பதோ குறுகிய நாட்கள்
பொறாமை எதற்கு
ஏளனம் எதற்கு
ஒப்பீடு எதற்கு
சஞ்சலம் எதற்கு
வேண்டவே வேண்டாம்
பிறப்பு தேதியும் தெரியாது.....
பிறப்பு இடமும் தெரியாது.....
இறப்பு தேதியும் தெரியாது.....
இறப்பு இடமும் தெரியாது.....
இது தான்
வாழ்க்கை (வட்டம்) சக்கரம் ....!!!