STORYMIRROR

Deepa Sridharan

Abstract

4  

Deepa Sridharan

Abstract

உடைய விடு மனதை

உடைய விடு மனதை

1 min
155

சோகம் அப்படித்தான்

கண்ணீரை இறைத்துக் கொட்டும்

மனநிறைவைத் தூர்வாரும்

இமயத்தை அழுத்திவைக்கும்

மூச்சுக்கு முலாம் பூசும்

இருத்தலை இல்லாமலாக்கும்

வெற்றிடமாய்க் கிடக்கையில்

திடீரென ஒரு நாள்

மெய் ஞானம் தெளித்துவிடும்

முளைத்துவரும் துளிர் ஒன்றை

வெளிச்சத்தில் படரவிடும்

பின் காடாகி மழையாகி

எல்லாமும் நிறையவிடும்

அவ்வப்போது

உடைய விடு மனதை

காலம் தன்னை

புதுப்பித்துக்கொண்டே 

இருக்கிறது

பழங்கட்டிடம்

வாழ்ந்த கதை சொல்லும்

புதியதோ 

வாழும் வழி சொல்லும்

                   


Rate this content
Log in

Similar tamil poem from Abstract