உண்மையா?
உண்மையா?


தினமும் சமாதானமாய்
ஏதோ ஒரு பொய்
உரைத்தாய் நீ!
கபட உள்ளத்தின் பிம்பமாய்
உன் வார்த்தைகளில்
மெருகேற்றினாய் ...
பொய்யுரைத்தாய் என்னிடத்தில்!
பெண்மையே கயமை என்று
என் மனதினை கூறுகளாக்கினாய்!
ஆண்மையின் வலிமையை
வெல்லும் வழியினைக்
கற்றுக் கொண்டாய் எளிதினில்!
மனதின் ஆழத்தினில்
ஒளிந்திருக்கும் எண்ணங்களை
உனதாக்கிக் கொள்ளும் வித்தையினை
யாரிடம் நீ கற்றுக் கொண்டாய்?
உள்ளம் தளர்ந்த வேளையினில்
உறவுச் சங்கிலியினில்
இரும்பென்று பிணைத்தாய்!
உன்னை விட்டு விலகிட
மரணம் ஒன்றே விடையென்று
ஏனோ முடிவெடுக்க வைத்தாய்?
சாபக்கேடாய் மாறிவிட்ட
நிம்மதியில்லா வாழ்க்கைக்கு
தவறான இலக்கினில் பயணிக்க
என்னை ஏன் வைத்தாய் நீ!