உழுதுண்பவன்
உழுதுண்பவன்
கலப்பையும் பேசும் களமும் பேசும்
களைப்பில்லாமல்
இந்த உலகில் எவனும் இல்லை
உன் உழைப்பில்லாமல்
காளைகள் களத்தோடு காதல் பாடும்
நெல் மணிகளும் உன் காலை முத்தமிடும்
அனைவரின் தேவையும் உன்னை நோக்கி
உன் தேவையோ தேவையை நோக்கி
நீ பிடிக்கும் ஏரினால் பிறர் நலன் ஏறும் தன்னலம் கருதா நல்லன்
நீ ஒரு வித்தை இட்டால் நூறாகும் அது இவ்வித்தை அறிந்தவன் எவனோ
நீ ஒருவனே இயற்கையோடு களமாடி வாகை சூடியவன்
பனியும் பணியும் விளையும் மணியும் மலையும் மழையும் கலையும் கழையும் விலையும் அதனால் ஆகும் விளைவும் யாவும் உனக்கு செவிமடுக்கும்
நீரின்றி நீர் இருக்கும் உன் கண்ணில் நீயின்றி பயிர் வாடும் மண்ணில்
நீ எடுக்கும் கலப்பை அது நிறைக்கும் இரைப்பை
நின் வாழ்வோ பிறை அனைவருக்கும் நீயே இறை
இரையின் இறையே இப்புவி மலர்வது உன்னாலே
