உள்ளங்கவர் மழை !
உள்ளங்கவர் மழை !
புன்னகையை உதிர்க்கிறாய் - அவற்றை
முத்துக்கள் என்றே இரசிக்கிறேன் !
கரங்களில் முத்துக்களை பற்றியே
மாலையாய் கோர்த்து சேர்த்திடவே
பேருவகையே கொள்கிறேன் !
ஆனால் நீயோ விரலிடுக்கில் நழுவுயே
விரைந்தோடி மறைகிறாய் !
நீயே விரும்பியே
கம்பிகளில் அணிவகுக்கையில்
வைர மாலையென ஜொலிக்கிறாய் !
எந்தன் உள்ளம் கவர் வான் மழையே !