தூவானம்..
தூவானம்..
கார்மேகம் சூழ்ந்து
கொண்ட நேரம்
தூவானம் சிந்துதே..
நீர்க்கோலம் போட
வானின் விழிக்கு
யார்சோகம் தந்ததே..
கண்ணாடி போலக் காட்டும்..
உன்சோகம் என்னை வாட்டும்..
மெய்நோகும் போது
நெஞ்சம் தாங்குமா..
தாங்காதே.. உள்ளம்
உன்னை நீங்கிப்
போகாதே.. அன்பிலே..
வாழாதே.. ஒன்றை
விட்டு ஒன்று
நான்கூட.. அன்றிலே..
நீராவியாகிக் காய்ந்து..
நீயாக என்னைச் சேர்ந்து..
வேரோடு கூட
என்னில் ஈரமா..
குளிர் நிலவினில்
விழும் பனி அதை
மனம் நினைக்கையில் மழை வரும்...
என் மனவெளியில்
உன் நினைவலை நிதம்
தவழ்ந்து தவழ்ந்து கரை தொடும்..
ஒரு வினை
அதில் இரு விசை
இது அறிவியல் சொல்லும் அதிசயம்..
இரு உடல்
இனி ஒரு உயிரென
Advertisement
color: black;"> உளவியல் சொல்லும் கவித்துவம்..
நீ..போகும் பாதை
பூவாக மாறவா??
நீ செல்லும் போது.. தரை மூடவா??
என் பிஞ்சு விரல்கள்
நீ முத்தம் வைக்க வா..
நீ முத்தம் வைக்க
நான் பூக்கவா..
தள்ளாடிடும் வஞ்சி
உந்தன் நடையில்..
நான் வேகின்றேன்.. என் ஏந்திலே..
என்னால் இங்கு..
இந்த வெப்பம் தாங்க வில்லையே.??
என்நெஞ்சில் உன்னைப் போர்த்துவேன்..
என் சோகம் யாவும்
ஓர் மேகமானது..
காற்றாய் நீ தீண்ட
பறந்தோடுது..
பெண்ணுள்ளம் என்றும்
புதிராலே ஆனது..
உன் அன்பு கண்டு
சதிராடுது...
என்பாதைகள் என்னைக்
கொண்டு எங்கு சேர்க்கும்..
என்றே... நான் போகிறேன்..
அறியாமலே..
உன்னிடத்தில்
என்னை சேர்த்தது...
நம் கைகள் கோர்த்தது..