தடைகள்
தடைகள்
பகலுக்கும் கதிரவனுக்கும்
இரவுக்கும் நிலவுக்கும்
தடைகள் யார் போட்டது .....!!!
கடலுக்கும் காற்றுக்கும்
அருவிக்கும் ஆற்றுக்கும்
தடைகள் யார் போட்டது .....!!!
மேகத்துக்கும் மழைக்கும்
நிலத்துக்கும் மண்ணுக்கும்
தடைகள் யார் போட்டது .....!!!
உறக்கத்துக்கும் கனவுக்கும்
உணர்வுக்கும் உரிமைக்கும்
தடைகள் யார் போட்டது .....!!!
இனத்திற்கும் சாதிக்கும்
மதத்திற்கும் மரபிற்கும்
தடைகள் யார் போட்டது .....!!!
பார்க்கவும் சுவாசிக்கவும்
உறவுக்கும் நட்பிற்கும்
தடைகள் யார் போட்டது .....!!!
குளிருக்கும் வெப்பத்துக்கும்
தண்ணீருக்கும் நிறத்திற்கும்
தடைகள் யார் போட்டது .....!!!
தனிமைக்கும் கூட்டத்திற்கும்
கொடுப்பதற்கும் எடுப்பதற்கும்
தட
ைகள் யார் போட்டது .....!!!
நடிப்பதற்கும் ஓடுவதற்கும்
நடப்பதற்கும் அடைவதற்கும்
தடைகள் யார் போட்டது .....!!!
நிழலுக்கும் பிம்பத்திற்கு
நிஜத்துக்கும் உண்மைக்கும்
தடைகள் யார் போட்டது .....!!!
பொன்னுக்கும் உடமைகளுக்கும்
பொருளுக்கும் இடத்திற்கும்
தடைகள் யார் போட்டது .....!!!
உனக்கும் எனக்கும்
காதலுக்கும் காமத்துக்கும்
தடைகள் யார் போட்டது .....!!!
இயற்கையே விதித்த தடைகளா
மனிதனே விதித்த தடைகளா
பூமியில்
புதிதாய் பிறந்த
கொரோனா தடைகள் ......
தடைகளை விதைத்த
மனிதனுக்கே தடைகள்
சோதனையோ வேதனையோ
விதித்த மனிதனின் குற்றமா
இல்லை கொரோனா குற்றமா
படைத்த கடவுளின் குற்றமா
தடைகளுக்கும் தடைகள் .....!!!