தொலையாத தேடல்
தொலையாத தேடல்


என்றோ...எப்போதோ.... எங்கோ...
ஏதோ ஒன்றை - இன்னதென்று அறுதியிட்டு சொல்ல இயலாததை
தொலைத்து விட்ட போதும்
தொலைந்ததை ஏற்றுக் கொள்ளா
பாழும் மனம் ....
இருட்டு அறையில்
குருட்டு கண்களைப் போல்
அலைபாய்ந்து - தேடி ஓய்ந்து
மயங்கிச் சரிகையில்
கண்முன் நிழலாடும்
வண்ணப் பூச்சிகளாய் !
தேடித் தேடி ஓய்ந்தாலும்
கிடைக்கப் போவதில்லை -
இந்த நிதர்சனம் உறைத்தாலும்
ஏனோ -
தேடல் மட்டும் தொலைவதே இல்லை!