தெம்மாங்கு கேட்டிடு..
தெம்மாங்கு கேட்டிடு..


நித்தம் நித்தம் சுழலும் இப்பூமிப்பந்தில்
சுற்றிச்சுற்றி ஓடுகிறோம்
கடிகார முற்களாய்..
முதலறியா முடிவறியா எதற்கு இத்தொடரோட்டம்..
இச்சிறுசக்கரத்தினுள்ளே..
பணம் என்னும் உயிரில்லா காகிதத்திற்காகவா?...
ஆயிரமாயிரம் காகிதமும்
அங்கங்கு கிடந்தது குப்பையில் ஓரிரவில்
அதற்கா இத்தனை தாகம்?
பார் போற்றும் பெயருக்காகவோ?...
போகம் பெயர் கொண்டதால் மட்டும்
தப்பிவிட்டாரா வருமானவரித்துறையிடம்
நம்மை நெஞ்சில் குடிவைத்த அண்ணரும்..
பார்த்து வியந்த பெண்ணிற்காகவோ?..
பொத்தி பொத்தி பாதுகாத்த
உன் தேகமே ஒருநாள் மாய்ந்திடுமெனில்
இன்னொருவளின் தேகமோகம் எதற்கு?
ஓட்டம் வேண்டாமடா ஒற்றை வாழ்வினிலே..
சிட்டும் பறந்திடுமடா சிட்டிகை சிறகினிலே..
மெல்லநடை போட்டிடு மெல்லிடையோடு..
தெம்மாங்கும் கேட்டிடு தேம்பாவணியென்று..