Story மூளைச் சாவு
Story மூளைச் சாவு
விபத்தில் மூளைச் சாவு அடைந்த பரமக்குடி வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
பரமக்குடி காந்தி நகரைச் சேர்ந்த தம்பதியினர் வெற்றிவேல் - ராஜேஸ்வரி. இவர்களது ஒரே மகன் சரத்குமார்(வயது 21). இவர் சிவகங்ககையில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 11 ம்தேதி இரவு வங்கியில் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் காந்தி நகருக்கு வந்தார். இளையாங்குடி அருகேயுள்ள அதிகரை விலக்கு ரோட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் படுகாயம் அடைந்த சரத்குமார் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாகக் கூறினர்.
அதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் சரத்குமாரின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முடிவு செய்து மருத்துவர்களிடம் கூறினர்.பின்பு மருத்துவர்கள் சரத்குமாரின் உறுப்புக்களை 7 பேருக்கு தானமாக பொருத்தினர்.
சரத்குமார் விருப்பபடி அவரது உடல் உறுப்புக்களை தானம் செய்ததாக பெற்றோர் கூறினர்.