புத்தாண்டு
புத்தாண்டு


எல்லா வருடமும் போல தான் இந்த வருடமும்....
சில மகிழ்ச்சிகள் ..
சில உறவுகள்..
சில முத்தங்கள்..
சில அணைப்புகள்..
சில ஸ்பரிசங்கள்..
சில புன்னகைகள்..
சில அழுகைகள்..
சில தேடல்கள்..
சில ஏமாற்றங்கள்...
சில இழப்புகள்...
சில பிரிதல்கள்...
சில தூரோகங்க்கள்...
சில தோல்விகள்...
சில குரோதங்கள்...
சில் கோவங்கள்...
சில வலிகள்...
சில வருத்தங்கள்..
எல்லா வருடமும் போல தான் இந்த வருடமும்....
கடந்தவை சில....
கடக்க முயல்பவை சில..
எற்றுக்கொண்டவை சில..
ஏற்க மறுத்தவை சில...
மாற்றியவை சில..
மாற்றமுயல்பவை சில...
மன்னித்தவை சில..
மன்னிக்க முயல்பவை சில..
மறந
்தவை சில..
மறக்க முயல்பவை சில...
எடுத்த முடிவுகள் சில...
எடுக்க முயலும் முடிவுகள் சில..
எல்லா வருடமும் போல தான் இந்த வருடமும்....
பயணித்த இடங்கள் சில...
பயணிக்க விழையும் இடங்கள் சில...
சந்தித்த உறவுகள் சில..
சந்நிக்க விரும்பும் உறவுகள் சில...
படித்த புத்தகங்கள் சில..
படிக்க விரும்பும் புத்தகங்கள் சில..
கேட்ட கேள்விகள் சில...
கேட்க துடிக்கும் கேள்விகள் சில ..
எடுத்த விடுமிறைகள் சில...
எடுக்காமலே விட்ட விடுமுறைகள் சில ..
அடைந்த இலக்குகள் சில.
அடைய நினைக்கும் இலக்குகள் சில .
எல்லா வருடமும் போல தான் இந்த வருடமும்.......
ஆமாம்...எல்லா வருடமும் போல தான் வரும் வருடமும்.......