புகழின் வெளிச்சம்
புகழின் வெளிச்சம்
மேடையின் ஒளிவெள்ளத்தில்
கருநீலப் பட்டாடையில் மிளிரும் வைரமாய்
என்னை உணர்ந்தேன்
இதற்குத் தானே ஆசைப்பட்டாய்
இத்தனை ஆண்டுகளாய் ?
மேடையின் ஒளிதான் உன்கனவா?
அது மின்னலாய் மறைந்துவிடாதா?
வைரத்தின் ஒளிதான் உன்கனவா?
அது உன்கரம்பிடித்து அழைத்துச் செல்லாதா?
உன்னுள்ளே புகுந்து உன் ஆன்மாவில் நுழைந்து
உன் நரம்புகளை மீட்டும் இசையாய்
உன்வாழ்க்கைப் பயணத்தில் உலவாதா?
என்கனவு மெய்ப்பட்ட அத்தருணம்
நான் போதிமரத்தைத் தஞ்சமடைந்த தருணம்
மேடை ஒளியின் மின்னல்
என்கண்களைக் கூசவைக்கும்
உள்மனதினுள்ளே புகுந்த ஒளி
என்னை வழிநடத்தும்
மேடையை மறந்தேன்
கனவைத் தொடந்தேன்
ஒவ்வொரு கனவாய் மெய்ப்பட
மேடைகள் என்னைத் தொடந்தன