பரிதி விடு தூது
பரிதி விடு தூது


உன்னை நான்
பார்த்த நாளாய்
இரவு தூக்கம்
தொலைந்ததடா!
காதல் என்ற
மூன்றெழுத்து
தேனாய் ஊற்றெடுக்கும் வேளையில்
பனிப் புழுதியில் நீ
நாட்டைக் காக்க
சென்றiனையோ!
பனி மூடிய மலையின்
எல்லையில் நீ இருக்க
குமரி எல்லை விளிம்பில் நான்
இருக்க இன்று
விடிந்த பகலவனே!
தூதாக எனக்காக நீ செல்வாயோ!