போராடு!
போராடு!
அடுத்து அடுத்து வேலைகள்
மனதை அழுத்தம் கவலைகள்
கவலைகளால் எழும் துன்பங்கள்
துன்பங்கள் தரும் உடல் உபாதைகள்
உபாதைகளால் மாறும் வாழ்க்கைப் பாதைகள்
உபாதைகளைக் குறைக்கும் மருந்துகள்
மருந்துகளால் வரும் விளைவுகள்
விளைவுகள் ஏற்படுத்தும் வலிகள்
வலிகள் படுத்தும் பாடுகள்
சொல்லி மாளாது !
சொன்னால் தீராது!
போராட்டங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை!
போராடி ஜெயித்து விடு!
புலம்பலைத் தவிர்த்து விடு!