பொங்கும் கண்ணீரில் ...
பொங்கும் கண்ணீரில் ...
பொங்கிடும் என் கண்ணீரில்
நான் செய்த கர்ம வினையெல்லாம்
இன்று தொலைந்திடுமா?
ஓவ்வொரு பொழுதிலும்
கரிய இருள் விலகும் என
சூரிய ஒளியினில்
என் உயிர் காத்திருக்க
நான் செல்லும் பாதையெங்கும்
முட்களும் கற்களுமே.
உப்பு கரிக்கும் கன்னங்களில்
மறுபடியும் மறுபடியும்
கண்ணீர் கறை படிந்திட
என்று தான் நான்
தடைகளை வென்று
வாழ்க்கையின் துன்பக்
கரைகளைத் தாண்டி
அடைந்திடுவேன்
வெற்றி எனும் இலக்கினை!