பண்டிகை பெருநாள்!
பண்டிகை பெருநாள்!
மண்ணில் மழைத்துளி ஒன்று விழுந்தால்
அன்று அது உழவருக்கு பண்டிகை தினமாம்.
தனது வயிற்றில் கரு உருவாகி அது இந்த
பூமியில் பிறக்கும் நாள், அன்னைக்கு பண்டிகை நாளாம்.
அன்னைமடியில் உறங்கிக்கொண்டு நன்று
உறங்கிளால் அன்று குழந்தைக்கு பண்டிகை.
தவழும் குழந்தை நடக்க முயற்சிக்கும்
முதல் நாள் பெற்றோருக்கு பண்டிகை நாள்.
மாணவர்கள் தேர்வுஎழுதி அதில் முழு தேர்ச்சி
பெற்றால் அன்று புதிய பண்டிகை கொண்டாட்டமாம்.
தனிமையில் வாடும் பொழுது தீடிரென்று
நண்பர்களின் வருகை ஒப்பற்ற மகிழ்ச்சி பண்டிகை.
பட்டம் பெற்றபின் வேலை கிடைக்கும் தெனம்
ஒருவருக்கு வெற்றி கொண்டாட்ட பண்டிகை.
என்று வறுமை நீங்கி வாழ்வு மேம்படுமோ அந்நாள்
நம் நாட்டிற்கே பண்டிகை திருநாளாம்.
அதே போல என்று இந்த கொரோனா பெருந்தோற்று முடியுமோ
அன்று நம் உலகிற்கே பண்டிகை பெருநாளாம்.
என்று வருமோ அந்த பண்டிகை பெருநாள் காத்திருப்போம் அதுவரை!
