பணி செய்யும் இயந்திரம்
பணி செய்யும் இயந்திரம்


இரட்டைக் குதிரைகளாய்
பெண் இயந்திரம் ஓடி
கரோனாவால் ஓய்வெடுத்து
வீட்டிற்குள் சலவை இயந்திரத்திற்கும்
அழுக்குக்கூடைகளுக்கும்
விடைகொடுத்து பல நாட்கள்
கடந்த நிலையில் தூசு தட்டி
அலமாரியில் அடுக்கிய
புத்தகங்களில் இருபத்தைந்து
வருட முன் அனுபவ ஓவியங்களை
படமெடுத்து பழைய
சுக்கு காபி சமையல் குறிப்பில்
கரோனாவை ஓட ஓட
விரட்ட காத்திருக்கிறது