பிஞ்சின் பயணம்
பிஞ்சின் பயணம்
தாங்கியப் பிஞ்சு பாதங்கள்...
தானே தரைப்பட்டு தொடங்கும்.பயணத்தின் .
ஒவ்வொரு அடியிலும் ஒரு நம்பிக்கை பிறக்கட்டும்...
மலர்கள் இருப்பின் அதையும் அனுபவிக்கட்டும்...
கற்கள் இருப்பின் அதையும் கடக்கட்டும்...
தடைகள் இருப்பின்...அதையும் தாண்டட்டும்...
தடுமாற்றங்கள் இருப்பின்... தளராது முன்னேறட்டும்......
எதை வேண்டுகிறாயோ எதுவாக ஆசைப்படுபிறாயோ அதை நோக்கியே தொய்வின்றி.. பயணிக்கட்டும்.....
அந்த பயணத்தில்..
மனிதம். நிரம்பி இருக்கட்டும்.....
இன்று எனக்கு கொடுத்த புன்னகையைப்போல்......
மகிழ்ச்சி நிரம்பி வழியட்டும்....