STORYMIRROR

Chidambranathan N

Abstract Classics

4  

Chidambranathan N

Abstract Classics

நட்பின் வாழ்க்கை

நட்பின் வாழ்க்கை

1 min
204

நம் நட்பு வேண்டும் என எண்ணம் கொண்டவர்கள்  நண்பர்களே!

நடு நிலையில் நின்ற நண்பர்களே நம்மை விட்டு விலகமாட்டார்கள்!

நமக்கு ஏமாற்றமும் வலியையும் தருபவர்கள்  தீயவர்களே!

நட்சத்திரமாக நின்று நல்வழியையும் அனுபவத்தையும் போதிக்கும் நண்பர்களே!

நடைவழிப் பாலமாகப் பொறுமையும் விட்டுக் கொடுத்தலையும் கற்பிக்கும் தோழர்களே!

நடுநிலைச் சமநிலையில் மனித நல்ல வாழ்வியலாகக் கற்பிக்கும் நண்பர்களே!

நண்பர்களுக்குள் நன்மைகளையும் தீமைகளையும் கற்பிக்கும் நண்பர்களே!

நாம் வாழும் உலகமே உண்மை இல்லை என்று உணர்த்துபவர்கள் தோழர்களே!

நகைக்கும் உறவுகள் உண்மையற்றது என உணர்த்துபவர்கள் ஞானிகளே!

நச்சு எண்ணம் கொண்ட எதுவும் நம்மிடம் நிலைப்பதுமில்லை என்று உணர்த்துபவர்களே!

நமக்காக நம்மைப் புரிந்த எதுவும் நம்மை விட்டு விலகுவதுமில்லையெனக் கூறுபவர்களே!

நாவடக்கமுடன் ஆசையில்லா எண்ணத்தோடு வாழ முடியவில்லை எனில் ஆறுதல் சொல்பவர்களே!

நன்னெறியான வாழ்வியலை வாழத் தெரியவில்லை எனில் அற நெறியைப் போதிப்பவர்களே!

நகமும் சதையும் போன்ற நஞ்சான நம் எண்ணங்களைக் களைய உதவி செய்பவர்களே!

நாம் அடையத் துடிக்கும்  விடியாத நடுநிசி இரவு வேண்டும் எனக் கனவு காண்பவர்களே!

நம்மைக் களைக்காத கனவு வேண்டும் என்ற ஆசை உடையவர்களே!

நன்மையான கனவில் அமைதி வேண்டும் என இறைவனை வேண்டுபவர்களே!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract