நம்பிக்கை
நம்பிக்கை


இந்திர விழாவில்
புறாக்கள் கூட்டத்தின்
நடனம் காண கதிரவனும்
இறங்கி வர
சிலம்பு கண்ட மாதவியும்
ஆடிய நடனம் உடன்
இணைந்து வர
வெற்றி நம்பிக்கை உச்சத்தில்
புறாக்களின் காத்திருப்பு!
மயில் அக்கா
கழுத்தின் ஆபரணத்திற்கு
வண்ணங்களைப் பன்னீராய்
தூவி விட
மாதவியும் ஆடலில்
தோற்றுவிட
புறாக்கள் மகிழ்ச்சியில்
இறக்கை விரித்து
பறந்தனவே!