நம் உலகம்...
நம் உலகம்...
உனக்கும் எனக்கும் தான் எத்தனை காலத்துப் பந்தம்......
எத்தனை எத்தனை நினைவுகள் நம்மைச் ச்ற்றி....
ஒரு கதை...ஒரு உறவு...ஒரு நினைவு...
எப்படி வந்து போகின்றன
ஒவ்வொரு பார்வை சந்திப்பிலும்..
பேசிய கதைகள் உனக்குத்தெரியும்..... .....
வருத்திய நினைவுகள் உனக்குத்தெரியும்.......
பட்ட பரிதவிப்புகள் உனக்குத்தெரியும்.......
ஓரமாய் வடித்த கண்ணீரும் உனக்குத்தெரியும்...
சந்தோசங்கள் உனக்குத்தெரியும்...
தீர்மானங்களும் உனக்குத்தெரியும்...
காயப்படுத்தாது .....
ஒரு அணைப்பாய் .....
தலைசாய்க்க ஒரு மடியாய்...
எந்த எதிர்பார்ப்புமின்றி....
நேற்றுபோல்...இன்றுபோல்...நாளையும்.
நம் பயணம் தொடரட்டும்..
இன்னும் பல புதிய வரவுகளுடனே...
பயணிப்போம்....நம் உலகில்....
.