நிரந்திரம்
நிரந்திரம்
மாற்றம் என்பது நிரந்திரம்
எதிர்பார்த்து வந்து சேர்ந்தாலும்
எதேச்சியாக வந்து சேர்ந்தாலும்..
பயணம் என்பது நிரந்திரம்...
நிழல் சூழ்ந்த பாதையாயினும்..
நிழல் தொலைத்த பாதையாயினும்....
இலக்கு என்பது நிரந்திரம்..
வழி துணையிருப்பினும்..
தன் துணையிருப்பினும்...
வாழ்தல் என்பது நிரந்திரம்
பிடிப்புடன் கடந்தாலும்
விரக்தியுடன் கடந்தாலும்..
வாழ்வு என்பது விதிக்கப்பட்டவரை
நிரந்திரம் என்பது அதுவரை..
பாரமானாலும் ...
வரமானாலும்...