STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

நினைவில் கொள்வோம்

நினைவில் கொள்வோம்

1 min
312

உழவுக்கு நிந்தனை செய்து 

தொழிலுக்கு வந்தனை செய்தால் உணவுக்கு நிபந்தனைகள் வரலாம்!

சிந்தனை செய்து செயலாற்றுவோம்!  

விவசாயம் பல காயங்களை காக்கும் தொழில்!

உயிர் காக்க பயிர் காப்போம்!

உணவு கிடைக்க உழவைக் காப்போம்!

உழவு நடக்க உழவனைக் காப்போம்!

வயிறு நிறைய பயிறு நிறைய வேண்டும்!

  பயிறு செழிக்க பருவமழை பக்குவமாய் பொழிய வேண்டும்!

விவசாயம் விவசாயிக்கான தொழில் அல்ல!

நமக்கான தொழில்!

உணவின்றி உலகு இல்லை!

உழவு இன்றி பயிர் இல்லை 

நம்மை படைத்துக் காப்பவன் கடவுள் என்றால்...

உணவு படைத்து நம்மைக் காப்பவனும் கடவுளே!

கடவுள் நம்மைக் காத்த காலம் மாறி...

கடவுள்களை நாம் காக்க வேண்டிய காலம்!

இதுவே இன்றைய அவலம்!

கடைசியில் அவர்கள் பாதத்தில் தான் நாம் சரணடைய வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துவோம்!


साहित्याला गुण द्या
लॉग इन

Similar tamil poem from Inspirational