நிலை
நிலை
பணம் பணம் என்றோடி வாழ்வின் மகிழ்ச்சியை, மனிதர்களை இழந்துவிட்டேனென்று சிலர், இப்போது மனிதர்கள் தன்னிடமிருக்கும் பணத்துக்காகத்தான் அன்பாயிருக்கிறார்களோ என்று சந்தேகிக்கும் அவர்கள் மனம்
மகிழ்ச்சி, மனிதர்கள் என்றோடி பணம் செய்ய மறந்துவிட்டேனென்று சிலர், இப்போது மனிதர்கள் கொஞ்சமாக விலகினாலும் அது தன்னுடைய பணமின்மையால் தானோ என்று சந்தேகிக்கும் அவர்கள் மனம்.
வேறொன்றுமில்லை
மனிதர்கள் எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு நேர்மாறான முடிவை எடுத்திருக்கலாமோ என்றெண்ணிக் கொண்டே இருப்பார்கள்,
அதற்கு இந்த வாழ்க்கை, பாதை வகுத்தபடியே இருக்கும்.