STORYMIRROR

Madhu Vanthi

Classics Inspirational Others

4  

Madhu Vanthi

Classics Inspirational Others

நீங்கிடாதே என் நினைவே...

நீங்கிடாதே என் நினைவே...

1 min
205

வட்டமடிக்குது அந்த நாட்கள்..

வாழ்வின் இறுதியிலும்,

சுற்றி வருது என்னையே...

கொள்ளை கொள்ளுது நெஞ்சையே..


சண்டையிட்டு மகிழ்ந்த

சுவடுகள் அங்கே...

பங்கு போட்டு உண்ட 

பாசங்களும் அங்கே... 

நித்திரை கொண்ட

புத்தகம் அங்கே...

வெட்டிநேரம் கடத்திய

தேர்வுகள் அங்கே...

நினைத்தால் வலிக்குது...

உடன் சேர்ந்து இனிக்குது..

பிரிவின் சுவடுகள் சுமந்து கடந்த

இறுதி வாரத்தின் இனிய நேரங்கள்...


ஐந்தாம் தேர்வு முடிந்தது,

ஆறாம் தேர்வுக்கு விடுப்பு அது.. அழகாய் வந்தது அடுத்த ஆறு நாள்.

கூடி சேர்ந்து குத்தாட்டம் போட்டோம்..

கல்வி தந்த புத்தகம் மாய்த்தோம்..

விளைவாக பொழிந்தது காகித மழை..

சபதமும் கொண்டோம் வரும் நாட்களுக்கு...

உயிர் போகும் ஜுரம் கொண்டாலும்

வருகை தருவோம் வார இறுதியிலும்.


மாலை கடந்தது மறுநாள் விடிந்தது..

பாடம் படிக்கும் சாக்கு சொல்லி

பல்லாங்குழி ஆட ஓடோடி வந்தோம்..

பரிட்ச்சையை காரணம் காட்டி

பாச விளையாட்டுகள் விளையாட வந்தோம்...

புத்தகம் அழகாய் பைக்குள் உறங்கிட...

நித்திரை கொண்டோம்,

யாம் நட்ட மரத்தடியில்.. 

அடித்து திருத்தும் ஆசான் கூட

காப்பி அடிக்காமல் தடுக்க..

ஏதோ ஒரு மாணவன் முன்னிலையில்

மேற்பார்வையாளராக...


நாளை பொழுது நாட்டுக்கோழி பிரியாணி வாங்க.... 

இன்றே உடைத்தோம் 

ஓராண்டாய் பாதுகாத்த உண்டியலை..

கோழியும் கைக்கு வர..

மாய்ந்த கோழிக்கு ஒரு இரங்களை கொடுத்து விட்டு..

கையினை மடக்கிடாமல் 

வயிற்றுக்குள் இறக்கியும்

முடித்தாகி விட்டது..


மறுநாள் உயிர்நட்பின்

இனிய பிறந்தநாள்.....

நட்பறியாமல் திட்டம் தீட்டி

செயல் படுத்தியும் ஆகிவிட்டது.. 

கண்முன் இருக்கும் கேக்கை கண்டு

ஆனந்த அதிற்சியில் வாய் பிளக்க..

பிளந்த வாய் நிரம்பியது

வெண்ணிலா கேக்கால்..

இரண்டாம் முறை குளித்தோம்

இனிப்பான மழையால்...


சூரியன் எழும்முன் குளித்து கிளம்பி

குறித்த நேரத்தில் காலடி பதித்தோம்

பள்ளி வாயிலில்...

அந்த ஞாயிறிலும்...

விசாலமாக விரிந்திருந்த  

வாயிலும் கூட வரவேர்த்தது... எங்கள் முகங்களை அறிந்தல்ல..

கசங்கி சுறுங்காத சீருடை கண்டு...


நாளை தேர்வுக்கு இன்று தேடினோம்..

என்றோ பைக்குள் புதைத்த 

புத்தம்புது புத்தகத்தை....

பக்கங்களை புரட்டிட 

மூக்கை துளைத்தது புதிய புத்தகத்தின் நறுமணம்..

அதையும் உள்ளிழுத்து...

அதனுடன் சேர்ந்து வார்த்தைகளையும் உள்ளிழுத்து...

சேமித்து வைத்தோம் நினைவலையில்.,

தற்காலிகமாக...


எப்படி சென்றது இந்த நாட்கள்...

நேற்றுபோட்ட திட்டங்கள்

இன்று நிறைவேறியது போல்...

இதோ இன்று இறுதி தேர்வு....

முடித்து வந்து வாயிலை பார்த்தால்..

இனி இவ்விடம் உமக்கல்ல என்றது சிந்தை...

மதியம் மாய்ந்த தேர்வுக்கு 

மாலை வரையில் ஒப்பாரி..

கட்டியழுதோம் கரும்பலகையை...

உருண்டு அழுதோம்

உட்காரும் பலகையில்...

சுற்றி சுற்றி அழுதோம் 

அந்த நான்கு சுவற்றை...


அந்தி சாயும் வேலையதில்

வாயிலை தாண்டி திரும்பி பார்க்க..

விசாலமாய் திறந்திருந்த வாயில் சொன்னது..

யான் உம் தாய் நீவீர் எம் பிள்ளைகள்..

என்றும் உம்மை அணைக்க காத்திருக்கும்

எம் திறந்த கரங்கள்...



Rate this content
Log in

Similar tamil poem from Classics