மயக்கத்தினில்...
மயக்கத்தினில்...
தினமும் சந்திக்கும் வாழ்க்கையின்
போராட்டத்தில் சக்தியிழந்த
என் உணர்வுகளுக்கு
தெம்பு அளித்திடும்
நான் எழுதும் கவிதைகள் -
என் கண்களை கடந்த தூரத்தில்
உன்னை வந்தடையும் போது
எனக்குள் ஏதோ ஒரு மாற்றம்
உன் எண்ண அலைகளின்
அலைவரிசையினை நான்
என்னுள் உணர்ந்திடும் போது
மறுபடியும் பிறந்தது
ஒரு இனிமையான பொழுதே.