Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

3  

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

முதலாம் காதல்

முதலாம் காதல்

1 min
248



முதல் பார்வையிலேயே

அவன் அழகு

என்னைக் கவர்ந்தது!


ரோஜா நிற ஈறுகளில்

பதிக்கப்பட்ட

வெண் பற்கள் தெரியப்

புன்னகைத்தான்!


அவன் புன்னகையில்

நான் மெய்மறந்தேன்!


அவன் பார்வையில்

ஒரு மின்சாரம் இருந்தது!


அவன் கம்பீர நடையில்

காதல் வயப்படலாம் போல் தோன்றியது!


என் காதலை 

எப்போது அவனிடம் சொல்வது?


அந்த ஒரு குறிப்பிட்ட

நாளுக்காகக் காத்திருந்தேன்!


எனக்குத் தெரிந்தவன்தான்

என்றாலும்

அவனுடன் பேசிப் பழகியதில்லை!


ஆச்சரியம்!

இதோ இப்போது என்வீட்டில்

அவனும் அவன் குடும்பமும்!


என் அக்காவைப் பெண் பார்க்க

வந்திருக்கிறார்கள்!



Rate this content
Log in