மரம் 💕 மழை !
மரம் 💕 மழை !


மர வனிதைக்கு
மழைக் காதலனும்
தென்றலை தூதாக அனுப்பிட
அகமகிழ்ந்த மர வனிதையும்
தன் கிளை கரங்களை பரப்பி
களிநடம் புரிந்திட -
நடனமதில் இலயித்த
மழைக் காதலன்
மென் தூறலாய்
மர காதலியை
தழுவிக் கொள்ள
ஏகாந்தத்தில் பூத்த
இனிய காதலுக்கு
இன்னிசை பாமாலையாய்
சில்வண்டுகளின் ரீங்காரம் !
நுணல்களின் மதுர குரலில்
தெவிட்டாத கச்சேரி !
சாட்சியாய் நின்ற
ஜீவராசிகளுக்கோ
இயற்கை அளித்த
தெள்ளமுது - தண்ணீர் !