STORYMIRROR

StoryMirror Feed

Romance Tragedy Others

3  

StoryMirror Feed

Romance Tragedy Others

மோகத்தை கொன்றுவிடு

மோகத்தை கொன்றுவிடு

1 min
409

மோகத்தைக் கொன்றுவிடு, அல்லாலென்தன் மூச்சை நிறுத்திவிடு;

தேகத்தைச் சாய்த்துவிடு, அல்லாலதில் சிந்தனை மாய்த்துவிடு;

யோகத் திருத்திவிடு அல்லாலென்தன் ஊனைச் சிதைத்துவிடு;

ஏகத் திருந்துலகம் இங்குள்ளன யாவையும் செய்பவளே!

பந்தத்தை நீக்கிவிடு அல்லாலுயிர்ப் பாரத்தைப் போக்கிவிடு;

சிந்தை தெளிவாக்கு அல்லாலிதைச் செத்த உடலாக்கு;

இந்தப் பதர்களையே நெல்லாமென எண்ணி இருப்பேனோ?

எந்தப் பொருளிலுமே உள்ளே நின்று இயங்கி யிருப்பவளே.

உள்ளம் குளிராதோ? பொய்யாணவ ஊனம் ஒழியாதோ?

கள்ளம் உருகாதோ? அம்மா! பக்திக் கண்ணீர் பெருகாதோ?

வெள்ளைக் கருணையிலே இந்நாய் சிறு வேட்கை தவிராதோ?

விள்ளற் கரியவளே அனைத்திலும் மேவி யிருப்பவளே!



Rate this content
Log in

Similar tamil poem from Romance