மலராத மொட்டு
மலராத மொட்டு
விடியாத காலை பொழுதும்
விரட்டி அடிக்கும் கதிரவனும்
முடியாத மாலை வேளையும்
ஏளனமாய் பார்த்த நிலவும்
கம்பிரமாய் நின்ற நட்சத்திரமும்
மிரட்டி பார்க்கும் மேகமும்
பசுமையை காட்டும் நிலமும்
பறந்து செல்லும் பட்டாம்பூச்சியும்
பாட்டு பாடும் கடல் நீரும்
தாவி செல்லும் முயல் இனமும்
மழைக்காக ஏங்கும் மரங்களும்
வளர துடிக்கும் செடிகளும்
நடனம் ஆடும் கொடிகளும்
துள்ளி ஓடும்
மான் கூட்டமும்
அன்பில் தவழும் காதலர் கூட்டமும்
பல வகை ஜோடி புறாக்களும்
விழி தேடும் வண்ண மயிலும்
ரீங்காரம் இடும் வண்டு இனமும்
ஏங்குவது ......!!!
மலராத அந்த மொட்டு பார்த்து
மொட்டு மலர்வதற்காக ........
மனிதன் மட்டும் விதிவிலக்கா என்ன
அவனும் ஏங்குவது
மொட்டு மலர்வதற்காக ........
இவர்கள் ஏங்கிய காரணத்தால்
சிரித்திக்கொண்டே
மலருமா மொட்டு ...............