மழலை
மழலை
மழலை
இது வாழ்வின் அடையாளம்!
இறைவன் தந்த பரிசு!
அதன் கள்ளம் கபடமில்லாப் பேச்சு…
நம் கவலைக்கு மருந்து!
களங்கமில்லாச் சிரிப்பு…
நம் மனதிற்கு விருந்து!
பிஞ்சு விரலின் அசைவில்….
கொஞ்சிப் பேசும் இசையில்…
கொவ்வை இதழின் சிரிப்பில்…
சின்ன விழியின் ஜாடையில்…
சித்திரப்பூவின் நடையில்….
மயங்காத மனமும் உண்டோ?