STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Abstract

3  

Kalai Selvi Arivalagan

Abstract

மேன்மையுடன்

மேன்மையுடன்

1 min
235

உன் நட்பின் மேன்மை

என் இதய துடிப்புள்ளவரை

நம் நட்பின் பந்தம்

நம் உயிரினும் மேலான

ஆத்மாவின் பதிவுனுள்

எத்தனை பிறவிகளில்

நீ என்னைத் தொடர்ந்தாயோ

இப்பிறவியினில் என்னை

தொடர்பு கொள்ள மறந்தாயோ

எங்கோ நீ இருந்தாலும்

என் இதயம் அறியும் உன்னை

இப்பூமியின் சுழற்சியினில்

மாறி வரும் பருவங்களாய்

நம் தோழமைக்கும் 

இன்று ஒரு வறண்ட காலம்

உன்னை நான் மீண்டும்

நேருக்கு நேர் சந்திக்கும்

அந்த வசந்த காலத்திற்கு

நான் காத்திருக்கும் 

மாலைப் பொழுதுகளில்

மெளனமாய் என்னிதயத்தில்

ஒலிக்கும் அத்தனை துடிப்புகளும்

வேண்டி நிற்கும் உன் வரவிற்காக.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract