மாறுபட்ட டாக்டர்
மாறுபட்ட டாக்டர்

1 min

67
டாக்டர், என் பிணி தீர டாக்டர்கள் வழக்கமாக ஊசி போடுவர்.... நீரோ ஊசி போட்டு பிணிகளை உண்டாக்குகிறீர்!
என் குருதியை பரிசோதிக்கவே.... ஊசி கொண்டு உறிஞ்சி எடுப்பர்!
நீரோ என் குருதியை வேண்டும் மட்டும் உறிஞ்சி எடுக்கிறீர்.... ருசிக்க மட்டுமே!
பரிசோதனை முடிவுகள் இதுவரை தந்ததுமில்லை!வந்ததுமில்லை!
நான் பரிசோதித்ததில் டெங்கு ....மலேரியா ..... யானைக்கால் வியாதி.... சிக்குன் குனியா.....
ஆக நீரோ உயிரை எடுக்கும் டாக்டர்!
அவர்களோ உயிரை கொடுக்கும் டாக்டர்கள்!