குட்டிவால் குருவி
குட்டிவால் குருவி
1 min
331
காலை நேரத்து பனித் தூறலில்
நனைந்த இளம்
மொட்டுகளின் அணிவகுப்பில்
பூத்த பன்னீர் ரோஜாக்களின்
காதல் கானம் கேட்டு
குட்டிவால் குருவிகள்
டிசம்பர் பூக்களுடன் தேன்
குடித்து சோலையில்
கைக்கிளைத் திணையை
வாசித்துக் கொண்டிருக்கிறது!