கற்பித்தவன்
கற்பித்தவன்


கல்வி கரையில கற்பித்தவன் நாள் பல
நீ தொட்ட சுண்ணக் கட்டி
அது எம் வாழ்க்கையை ஆக்கியது வண்ணம் கூட்டி
உன் தள்ளாமையிலும்
என் வாழ்க்கை தள்ளாமல் செல்ல துணை புரிந்தாய்
கல்வியின் கற்புக்கரசனே!
ஆட்சியாளன் செங்கோல் நலுவாமல் இருக்க செய்தாய்
பேச்சாளன் வார்த்தை வழுவாமல் இருக்க வைத்தாய்
மருத்துவம் தந்தாய்
மகத்தான தத்துவம் தந்தாய்
வீரம் ஊட்டினாய்
விவேகம் புரிவித்தாய்
வித்தைகள் பல விதைத்தாய்
வித்தாய் நீ வீழ்ந்தாய்
படித்தவன்! பல மனிதத்தை
படைத்தவன்! என்ற உயர்வு கொண்டவனே
கலப்படமற்ற கல்வி ஆளனே
கல்வியின் ஆண்டவனே
என் முதலை
உன் அடியில் வைத்து பணிகிறேன்