கோடையில் ஒரு குளிர்
கோடையில் ஒரு குளிர்
கொழுந்து விட்டெரியும் சூரியன்
அருவியாய் கொட்டும் வியர்வை
வெயிலின் தாக்கத்தினால் உடல் சோர்வு
இதற்கு மத்தியில் குளிர் தரும் ,
பருவகால பழங்கள் நம்மை சந்தோஷப்படுத்துகிறது !
கார்மேகம் சூழ்ந்து பொழியும் மழையும் !
சில்லென்று வீசும் குளிர் காற்றையும் !
இந்த கண்கள் கண்டு பலநாட்கள்
கடந்துவிட்ட நிலையில் , திடீரென பொழியும்
மழை மகிழ்ச்சியை தந்து செல்கிறது.