STORYMIRROR

valangai arivu

Tragedy

4  

valangai arivu

Tragedy

கண்ணீர் மீன்

கண்ணீர் மீன்

1 min
569

பிரம்மன் கொடியவனே!

பிரம்மன் கொடியவனே!

பிஞ்சு நெஞ்சில்

வஞ்சம் வைத்தான்

பிரம்மன் கொடியவனே !

பஞ்சை நெருப்பால்

பற்ற வைத்தான்

பிரம்மன் கொடியவனே!

பேசும் பேச்சை    கேட்டால் அது

கரும்பாய் இனிக்கிறது

இதயக் கதவை தட்டிப்பார்த்தால்

இரும்பாய் கனக்கிறது

பெண்கள் கண்கள்

வலை வீசும்   மீனவனோ?

ஆண்கள் மனம் சிக்கித் தவிக்கும் கண்ணீர் மீனோ?

உயிருடன் என்னை நடமாட வைத்த தாயும் பெண்தானே!

உயிருடன் என்னை ஜடமாய் வைத்த அவளும் பெண்தானே!

இருவரும் பெண் தான் என்றாலும் எத்தனை வித்தியாசம்!

மீளா துயரில்  தள்ளிவிடும் பெண்ணின் சகவாசம்!

பிரம்மன் கொடியவனே!

பிரம்மன் கொடியவனே!!!

வாலறிவன்



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy