STORYMIRROR

valangai arivu

Others

4  

valangai arivu

Others

தீபாவளி

தீபாவளி

1 min
516


பரவசம் மிக்க

பண்டிகை முடிந்து !

இனிப்பும் காரமும்

இன்னமும் இருக்கு !

கடனை வாங்கி

கடையில் வாங்கி

குவித்த வெடியோ

குப்பையாய் தெருவில் !

நோம்பிச் செலவை

நொந்துபோய் எழுதி

தேம்பிய அப்பா

தேற்றிய அம்மா !

உடுத்தியும் வெடித்தும்

உண்டும் களைத்தும்

தூக்கத்தின் தாக்கத்தில்

துயிலும் பிள்ளைகள் !

பார்த்தனர் மகிழ்ந்தனர்

பாசத்தில் பெற்றோர் !

நேசமும் பாசமும்

நேர்மையாய் வீசிடும்

குடும்பத்தில் மகிழ்ச்சி,

குதுகுலம் நிரந்தரம். !!!

வாலறிவன்

.



Rate this content
Log in