காசு!
காசு!
காசு!
கண் முன்னே
பறந்தோடும் காசே!
ஏழைகளின்
மேல் ஒட்டாத தூசே!
ஏழைக்காய்
விலைவாசியிடம் செல்லு!
மலை போல
வளராம இறங்கி வரச் சொல்லு!
இயலவில்லை
என்றால் பரவாயில்லை!
இரக்கம் உன்னிடம்
இல்லை என்று தெரியும்!
இருந்தாலும் ஒரு வார்த்தை.....
நீ கூரையை பொத்துக் கொண்டு
கொட்ட வேண்டாம்!
சாக்கு கந்தலில்
திரையிட்ட சன்னல்
வழியே கொஞ்சம் வீசு!
கை நிறைய இல்லை என்றால் என்ன ?
மனசு நிறைய
பொறுக்கிக் கொள்கிறேன்!!!
வலங்கை அறிவு
