STORYMIRROR

valangai arivu

Others

5  

valangai arivu

Others

என் நாடு

என் நாடு

1 min
736


புரளி இன்றி

புலரா பொழுது


டீக்கடை பெஞ்சில்

சாக்கடை பேச்சு


நாட்டின் முதுகெலும்பு

நாசமாய் போச்சு


கொள்கை இல்லா

கொள்ளை அரசியல்


மதுக்கடை வருவாய்

மக்கள் பணிகள்

மணலை சுரண்டி

மரணித்த ஆறுகள்


எரிபொருள் உறிஞ்சி

இறந்த நிலங்கள்


அழிந்த விவசாயம்

ஒழிந்த விவசாயி


நாடோடிகளாய்

நகர்புறங்களில்


சிலர் கூலிக்கு எச்சை

பலர் சாலையோர பிச்சை


இலவசங்களுக்கு கைநீட்டி

இழந்து போன உரிமைகள்


விற்பனைக்கு எல்லாம்  இங்கே

விரல் மை ஓட்டும் தான்


என நீட்டி முழங்கு சங்கே

நீட்டி முழங்கு சங்கே.....

வாலறிவன்

.....



Rate this content
Log in