கண் முன்னே
கண் முன்னே
என் கண் முன்னே,
நீ கடந்து செல்கின்றாய்,
முகத்தில் புன்னகை மாறாமல்,
எதிரிலே நான் இருக்கிறேன் என்பதை அறியாமல்,
என் நினைவுகளின் சுவடுகள் எதுவும் இல்லாமல்,
நகர்ந்து செல்வதை காணும் போது,
என் கண்களில் கண்ணீர் குளமாகி நிற்கின்றேன்,
என்னை அறிந்து கொள்ள மாட்டாயா என்று,
உன் பின்னே நடக்க தொடங்கிவிட்டேன்.....

