களம் கண்டேன்
களம் கண்டேன்


காலை நேரம் கண்விழித்ததும்….
கைபேசியை தேடினேன்!
விதவிதமான செய்திகள்…. வாழ்த்துகள்….
காலை வணக்கங்கள்…
நம்பிக்கையூட்டும் வரிகள்….
இடையில்…
புத்துணர்வு கொடுத்தது புதிய செய்தி ஒன்று!
கதைக் கண்ணாடி(story mirror) வந்து நின்றது…
என் கண்முன்னாடி!
வாக்குக் கேட்டுத் தோழி ஒருத்தியின் பதிவு!
அதே கணம்…. இணைய தளத்தில் நுழைந்தேன்!
ஏதுவான களம் இதுவென்று அறிந்தேன்!
சமையலில் முன்னேறுவது எங்ஙனம்?
சிந்தித்த மூளை…
சபையில் முன்னேறுவது எங்ஙனம்? சிந்திக்கிறது!
சவாலை சந்திக்கிறது!
31 நாள் 31 படங்கள் 31 கவிதை…
தொடவும் மனமில்லை…. விடவும் மனமில்லை!
முடியுமா உன்னால் ? மூளை முணுகியது…..
முடியும் உமா உன்னால் ! மனம் கூறியது!
நடை பழகும் பிள்ளைக்கு நடை வண்டியாய்…
திக்குதிசை தெரியாதோருக்கு கலங்கரை விளக்கமாய்…
தன்னம்பிக்கை உள்ளோருக்கு நல்ல ஊன்றுகோலாய்….!
கடிவாளமோ…. திசையோ…
எல்லையோ…. கட்டுப்பாடோ….. இன்றி
கற்பனைக் குதிரை….
சுதந்திர வானில் சிறகடித்துப் பறக்கிறது!
நாலா திசையும் அலைந்து திரிந்து….
வார்த்தைப் பூக்களைக் கோர்த்து….
பாமாலையாய் தொடுக்கிறது!
மூளைக்கு வேலை…. கற்பனைக்குத் தீனி…
வாய் பேசாத ஆயிரம் வார்த்தைகளை
ஒரு படம் சொல்கிறது!
வெற்றிக்கொள்வேனா? தெரியாது!
பெற்றுக்கொள்வேன் பல அனுபவங்களை!
எழுத்து வானில் நானும் நட்சத்திரமாய் ஜொலிக்க!
சீசன்கள் பெருகட்டும்! சிட்டிசன்கள் வளரட்டும்!