கலைந்த கனவுகள் பல....
கலைந்த கனவுகள் பல....
ஆழி விழுந்த கனவை தேடி
ஆழம் சென்றேன்...
உடைந்து போன
அதிசயம் கண்டேன்
பிரம்மாண்ட உருவம் அது...!!
அருகில் என் கனவு
அழகாய் லயித்திருக்க
மனமோ பிரம்மாண்டத்தை நோக்கியது
என் கனவை பற்றியபடி
மனம் நினைத்தது
இது...... என்று ,
யார் தவறிய கனவோ?