STORYMIRROR

DEENADAYALAN N

Abstract Romance

3  

DEENADAYALAN N

Abstract Romance

காதலின் பரிணாம வளர்ச்சி!

காதலின் பரிணாம வளர்ச்சி!

1 min
249

 

 

 



குரங்கில் இருந்து

பிறந்தவன் மனிதன் – அந்த

மனிதருள் காதல்

எப்போது துவக்கம்?


கற்கால மனிதனுக்கு

காமமே காதல்

கண்ட கண்ட ஜோடிகளாய்

கண்டும் காணாமலும்.!.


தற்கால மனிதனுக்கு

வாழ்க்கையே காதல்

இன்பதுன்பம் கலந்து

இருந்தும் இல்லாமலும்!


பால் வேறுபாட்டில்

காதல் துவங்கியிருக்கும்!


இனம்புரியாத பருவ

ஈர்ப்பில் தொடர்ந்திருக்கும்


இரு மனம் ஒருமனம்

என கலந்திருக்கும்!


‘உடலின் ஈர்ப்பு’ எனும்

உட்காதல் இணைந்திருக்கும்!


நிரந்தரமாய் இணைந்திருக்க

வழி ஒன்று வகுத்திருக்கும்!


திருமணம்போல் ஒரு

முடிவை எடுத்திருக்கும்!


கண்டதும் காதல்

காணாமலே காதல்

காசுக்கு காதல்

காதலுக்காக காதல்

உண்டபின் காதல்

உறங்கிடவே காதல்

அனைத்தையும் ஒதுக்கி

அப்புறப் படுத்தி விட்டால்

மேலே பார்த்ததுவே

மேன்மையான காதலோ!


                           



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract