காதல்
காதல்
உந்தன் விழி தேடி,
எந்தன் விழி அலையும் வேளையில்,
எதிர்பாராமல் வரும் உந்தன் குறும் செய்தி,
தன் கண்ணை நம்ப முடியாமல்,
மறுபடியும் மறுபடியும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்,
நீ என்னை காண வருகிறாய் என்பதை பார்த்ததும்,
திடிரென கேட்ட சத்தம்,
கலைத்துவிட்டது எந்தன் கனவினை,
எந்தன் கற்பனையில் மட்டுமே என்னை காதலித்து கொண்டிருக்கிறாய்,
என்பதை அறிந்தும் காதலித்து கொண்டிருக்கிறேன், உன்னை...
எனக்காக வருவாய் என்று....

